You are here

ஃபூக்கோ - அறிமுகம்

மனிதனின் மரணத்தை அறிவித்தவர் ஃபிரெஞ்சு பின் நவீனத்துவவாதியான மிஷல் ஃபூக்கோ. அதன் இயல்பான அர்த்தத்தில் மனிதன் என்று அழைப்பதற்கு ஏற்ப யாரும் இல்லை. இருப்பவை யாவும் உடல்களே. அதிகாரத்தின் உரையாடல்கள் மூலம் சாதுவாக்கப்பட்ட உடல்கள். மன்னராட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட் அரசாக இருந்தாலும் சரி, அந்த அரசின் ஆட்சியின் கீழ் வாழும் மனிதன் என்பவன், உடல் என்ற சிறையில் அடைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவாக இருக்கிறான் என்கிறார் ஃபூக்கோ. இந்தச் சந்தர்ப்பத்தில் ஃபூக்கோ ‘உடல் ஆதிபத்தியம்’ என்ற சொல்லாடலைப் பயன் படுத்துகிறார். எம்.ஜி.சுரேஷ் இவர் தமிழின் மிக முக்கியமான படைப்பாளி. தொடர்ந்து பின் நவீனத்துவத்தை முன்னிறுத்தி எழுதி வருபவர். அலக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும், அட்லாண்டீஸ் மனிதன் மற்றும் சிலருடன், 37, சிலந்தி, பின்நவீனத்துவம் என்றால் என்ன- என பத்துக்கும் மேற்பட்ட பின் நவீனத்து படைப்புக்களை தமிழுக்கு தந்திருக்கிறவர். இவரது புனைவுகளும், கட்டுரைகளும் பின் நவீனத்துவத்தினை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல்கள்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4011 partheeban Available - Reserve it