You are here

உடையும் இந்தியா

இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இந்தப் புத்தகத்தில், ஆசிரியர்கள், மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை மட்டுமே பிரதானப்படுத்தி ஆராய்ந்துள்ளனர். இந்தியாவின் பிற சமூகங்களிடமிருந்து திராவிட, தலித் சமூகங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய சர்ச்சுகள், அறிவுலகம், சிந்தனைக் குழுமங்கள், நிறுவனங்கள், அரசாங்கங்கள், மனித உரிமைக் குழுக்கள் ஆகியவற்றின் பங்கைப் பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. ஆரிய-திராவிட இனங்கள் என்ற புரட்டு எந்த நூற்றாண்டில், யாரால் உருவாக்கப்பட்டது, ஆஃப்ரோ-தலித் கருத்தாக்கம் யாரால், எப்போது முன்வைக்கப்பட்டது, எப்படி இந்த அடையாள அரசியனானது இந்தியர்களைப் பிரிக்கும் வேலையைச் செய்கிறது என்பதை முழுமையாக இந்நூலில் அலசுகிறார்கள் ஆசிரியர்கள்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4025 partheeban Available - Reserve it