You are here

தேர்ந்த்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் பகுதி

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத நடத்தைகளும் உருவாக்கும் அர்த்தமின்மையும் அங்கதமும் இக்கதைகளைத் தனித்துவமுள்ளதாக்குகின்றன. மனித மனதின் இருள்வெளிகள், தனிமைகள், அவமானங்கள், சிறுமைகள், வினோதங்கள், சமூகச் சீரழிவுகள் எனப் பல்வேறு தளங்களில் இக்கதைகள் சஞ்சரிக்கின்றன. எழுதப்பட்ட காலத்திலிருந்து சுஜாதாவின் வாசகர்களின் நினைவுகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் 'பாலம்', 'குதிரை' 'ஒரு இலட்சம் புத்தகங்கள்', 'இரு கடிதங்கள்', 'தனிமை கொண்டு' உள்ளிட்ட பல புகழ்பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
2004 partheeban Available - Reserve it