You are here

சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா

அதிகாரம், அமைதி, சுதந்திரம்

சாரு நிவேதிதா சமகால சமூக அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. அரசியல் அறவுணர்வும் தார்மீக நியதிகளும் தொடர்ந்து சீரழிக்கப்படும் ஒரு காலகட்டத்தில் இந்த நூல் நமது சமூக விழிப்புணர்விலிருந்து தீவிர எதிர்கொள்ளலை வேண்டி நிற்கின்றன.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4009 partheeban Available - Reserve it

கடவுளும் நானும்

ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விலையும் அவர் அறுதியாக ஆன்மீகம் என்பதை தன்னை வெளி நடத்தும் வெளிச்சமாகக் காண்கிறார்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4008 partheeban Available - Reserve it

தப்புத்தாளங்கள்

உலக நாடுகளில் பரவலாக லத்தீன் அமெரிக்க இலக்கியமே பெரிதும் அறியப்பட்டதாக இருந்து வருகிறது. ஆனால் அதைவிடவும் காத்திரமான இலக்கியம் அரபி மொழியிலிருந்துதான் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன் மகத்தான படைப்புகளையும் படைப்பாளிகளையும் பற்றிய அறிமுகங்களை இந்நூலின் பல கட்டுரைகள் முன்வைக்கின்றன. இஸ்லாமியக் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய ஆன்மீகம் இவற்றின் விழுமியங்களை நாம் அறிந்துகொள்ளத் தடையாக இருப்பது எது என்பது பற்றிய விவாதத்தை இந்த நூல் ஆரம்பித்து வைத்தால் அதுவே இக்கட்டுரைகள் எழுதப்பட்டதற்கான நியாயத்தை நிறைவு செய்யும்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4007 partheeban Available - Reserve it

தீராக்காதலி

தமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாக ராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில் தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.

தேகம்

வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை எப்போது மனிதர்கள் கண்டுபிடித்தார்களோ அன்றிலிருந்து சித்ரவதையின் தொழில்நுட்பம் நுணுக்கமாகத் தொடர்ந்து மாறுதலடைந்து வந்திருக்கிறது. சித்ரவதைகள்மூலம் ஒரு உடலை இன்னொரு உடல் முழுமையாக வெற்றிகொள்ளும்போது நிகழ்வது, ஒரு புராதனமான மிருக இச்சையா அல்லது அதற்குள் ஒரு நீதிமுறை செயல்படுகிறதா என்கிற கேள்வியை எதிர்கொள்கிறது இந்த நாவல்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR CN007 Sathiya Available - Reserve it

வரம்பு மீறிய பிரதிகள்

சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின்றன. அதே சமயம் எழுத்தின் வரம்புகளை உடைத்தெறிந்த ழார் பத்தாய், கேத்தி ஆர்க்கர், ஹோஸே மரியா ஆர்கெதா, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, க்ரிஸ்டினா பெரி ரோஸி, அல் முகமது ஷுக்ரி போன்றோரின் படைப்புகள் குறித்து மிக ஆழமான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR CN052 Sathiya Available - Reserve it

நரகத்திலிருந்து ஒரு குரல்

சாரு நிவேதிதா எழுதும் சினிமா விமர்சனங்கள் தமிழ் சினிமாவை அதன் அழகியல் தளத்திலும் சமூகத்தளத்திலும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துபவை. சர்வதேச சினிமாவின் தரத்தை நோக்கி நகர முயலும் புதிய முயற்சிகளை உற்சாகத்துடன் வரவேற்கும் சாரு, புதுமை என்ற பெயரில் உருவாக்கப்படும் பாசாங்குகளையும் படைப்பூக்கமற்ற வெற்று நகல்களையும் இக்கட்டுரைகளில் கடுமையாக நிராகரிக்கிறார். தமிழ் சினிமாவின் மொழியும் அடையாளமும் மெல்ல மாறிவரும் ஒரு காலகட்டத்தில் அந்த மாறுதலின் நுட்பங்களையும் சிக்கல்களையும் விமர்சன நோக்கில் இந்த நூல் பரிசீலனைக்கு ஆட்படுத்துகிறது

மூடுபனிச் சாலை

கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் - குறிப்பாக தமிழகத்தில் - நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR CN018 Sathiya Available - Reserve it

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத் தன்மையை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச்செல்கின்றன.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR CN011 Sathiya Available - Reserve it