You are here

வைரமுத்து

தண்ணீர் தேசம்

எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அந்தச் சமுத்திர முயற்சியின் ஒரு துளிதான் இந்தத் ''தண்ணீர் தேசம்''> கடலியலை இலக்கியப்படுத்தும் ஒரு பிள்ளை முயற்சி.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
5002 Paranth Available - Reserve it

கள்ளிக்காட்டு இதிகாசம்

கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக் நீரொழுக் நினைத்துக் கிடந்தேன். பிறந்த மண்ணுக்கும், வாழ்க்கையும் வட்டார வழக்கும் சொல்லிக் கொடுத்த மக்களுக்கும் நான் காட்டும் நன்றி என்று சொல்லலாம் இந்த நாவலை.(2003 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு இது)
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
1044 Paranth Available - Reserve it

கருவாச்சி காவியம்

கருவாச்சி என்கிற கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையின் சில வருட நிகழ்வுகள்தான் இந்தக் கதை. இந்தக் கருவாச்சி யாரோ ஒரு தனிப்பட்ட பெண் அல்லள். எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கிற பெண்குலத்தின் பிரதிநிதி இவள். வாழ்க்கையின் நீரோட்டத்தில் எங்கெங்கோ அடித்துச் செல்லப்பட்டு கடைசியில் சமுத்திரம் சேரும் ஒரு சாதாரண பெண்ணின் கதை.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
MU0002 mugunth Available - Reserve it

தமிழுக்கு நிறம் உண்டு

நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே எட்டிவிட்ட இனம் தமிழர் இனம். மாசுபடாத காற்று - மாசுபடாத தண்ணீர் -மாசுபடாத காடு மாசுபடாத பண்பாடு - இவற்றோடு தமிழினம் செழித்திருந்த சங்க காலத்தில் அதன் மக்கள் தொகை நாற்பது லட்சம் முதல் நாற்பத்தைந்து லட்சம் மட்டுமே. அப்போதே தமிழ் உள்ளூர் மனிதர் குறித்தும் சிந்தித்தது.உலக மானுடம் குறித்தும் உரக்கச் சிந்தித்தது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3014 partheeban Available - Reserve it