You are here

கட்டுரைத் தொகுப்பு

கட்டுரைத் தொகுப்பு

வேடிக்கை மனிதர்கள்

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழும் அனுபவங்களைத் தொகுத்து, அவற்றை ஏட்டில் பதிவு செய்தால் அனைத்தும் சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்த களஞ்சியமாகும். ஆனால், அதற்கு நினைவாற்றலும் எழுத்தாற்றலும் இருத்தல் அவசியம். வெ.இறையன்புவிற்கு, மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு ஆற்றல்களுடன் பேச்சாற்றலும் கைவரப் பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் புத்தகத்தில் நூறு கட்டுரைகள். நூலாசிரியர் எதிர்கொண்ட அனுபவங்கள் கண்ணில் தென்பட்ட சில காட்சிகள். கூர்ந்து பார்த்து அவதானித்த சில சம்பவங்கள். மனதிற்குள் பூட்டி வைத்திருந்த சில நினைவுகள்; கனவுகள்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
5005 Paranth Available - Reserve it

அதிகாரம், அமைதி, சுதந்திரம்

சாரு நிவேதிதா சமகால சமூக அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. அரசியல் அறவுணர்வும் தார்மீக நியதிகளும் தொடர்ந்து சீரழிக்கப்படும் ஒரு காலகட்டத்தில் இந்த நூல் நமது சமூக விழிப்புணர்விலிருந்து தீவிர எதிர்கொள்ளலை வேண்டி நிற்கின்றன.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4009 partheeban Available - Reserve it

கடவுளும் நானும்

ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விலையும் அவர் அறுதியாக ஆன்மீகம் என்பதை தன்னை வெளி நடத்தும் வெளிச்சமாகக் காண்கிறார்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4008 partheeban Available - Reserve it

தப்புத்தாளங்கள்

உலக நாடுகளில் பரவலாக லத்தீன் அமெரிக்க இலக்கியமே பெரிதும் அறியப்பட்டதாக இருந்து வருகிறது. ஆனால் அதைவிடவும் காத்திரமான இலக்கியம் அரபி மொழியிலிருந்துதான் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன் மகத்தான படைப்புகளையும் படைப்பாளிகளையும் பற்றிய அறிமுகங்களை இந்நூலின் பல கட்டுரைகள் முன்வைக்கின்றன. இஸ்லாமியக் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய ஆன்மீகம் இவற்றின் விழுமியங்களை நாம் அறிந்துகொள்ளத் தடையாக இருப்பது எது என்பது பற்றிய விவாதத்தை இந்த நூல் ஆரம்பித்து வைத்தால் அதுவே இக்கட்டுரைகள் எழுதப்பட்டதற்கான நியாயத்தை நிறைவு செய்யும்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4007 partheeban Available - Reserve it

கணையாழி - கடைசிப்பக்கங்கள்

சுஜாதா கணையாழியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல், வேடிக்கைகள் என விரியும் இப்பத்திகள், வெளிவந்த காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டவை; விவாதிக்கப்பட்டவை. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.என்ற பெயரிலும் சுஜாதா என்ற பெயரிலும் 'நீர்க்குமிழிகள்', 'பெட்டி', 'கடைசிப்பக்கங்கள்' எனப் பல தலைப்புகளில் இவை எழுதப்பட்டன. சுஜாதா என்ற ஆளுமையின் பல்வேறு தோற்றங்களையும் அந்தந்தக் காலகட்டத்தின் பதிவுகளையும் கொண்ட இந்நூல் ஓர் அரியஆவணமாகத் திகழ்கிறது.

காத்திருந்த வேளையில்

கவிஞராக அறியப்படும் மனுஷ்யபுத்திரனை ஒரு கட்டுரையாளராக வேறொரு பரிமாணத்தில் வெளிப்படுத்தும் தொகுப்பு. அம்பலம் இணைய இதழில் பத்திகளாக வெளிவந்த இக்கட்டுரைகள் சமூக, இலக்கிய நிகழ்வுகள் பற்றிக் கூர்மையும் அங்கதமும் கொண்ட பார்வைகளை முன்வைக்கின்றன.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3003 partheeban Available - Reserve it

தீராக்காதலி

தமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாக ராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில் தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.

ஆளுமைகள் மதிப்பீடுகள்

சுந்தர ராமசாமி அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் முழுத்தொகுப்பு.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR SR061 Sathiya Available - Reserve it

பெரியார்

பத்திரிகையாளர் சுகுணா திவாகர் அவர்கள் இணையதளத்தில் இயங்கிவந்த பொழுது எழுதிய “பெரியார்” மீதான விமர்சனம் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு

நரகத்திலிருந்து ஒரு குரல்

சாரு நிவேதிதா எழுதும் சினிமா விமர்சனங்கள் தமிழ் சினிமாவை அதன் அழகியல் தளத்திலும் சமூகத்தளத்திலும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துபவை. சர்வதேச சினிமாவின் தரத்தை நோக்கி நகர முயலும் புதிய முயற்சிகளை உற்சாகத்துடன் வரவேற்கும் சாரு, புதுமை என்ற பெயரில் உருவாக்கப்படும் பாசாங்குகளையும் படைப்பூக்கமற்ற வெற்று நகல்களையும் இக்கட்டுரைகளில் கடுமையாக நிராகரிக்கிறார். தமிழ் சினிமாவின் மொழியும் அடையாளமும் மெல்ல மாறிவரும் ஒரு காலகட்டத்தில் அந்த மாறுதலின் நுட்பங்களையும் சிக்கல்களையும் விமர்சன நோக்கில் இந்த நூல் பரிசீலனைக்கு ஆட்படுத்துகிறது