You are here

சங்க இலக்கியம்

முத்தொள்ளாயிரம் - எளிய வடிவில்

என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு, முத்தொள்ளாயிரம். பாடலாசிரியர் அல்லது ஆசிரியர்களின் பெயர் கிடைக்கவில்லை. ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல் என்னும் வீதத்தில் மொத்தம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4021 partheeban Available - Reserve it

சங்க சித்திரங்கள்

உரை விளக்கங்கள், இலக்கணங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, தன் வாழ்க்கை அனுபவங்களையும் கற்பனையையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவன் இக்கவிதைகளை அணுக வேண்டும். கவிதையின் அசல் வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டால் போதும். அவற்றுடன் உள்ள துறைக் குறிப்புகள் போன்றவைகூடத் தேவை இல்லை.... சங்க காலக் கவிதைகளை, சமகால நவீன கவிதைகளை எப்படி வாசிக்கிறோமோ அப்படி வாசிப்பதே நல்லது... பண்டைய கவிதைகளில் வெறும் வர்ணனைகளாகவோ அணியலங்காரங்களாகவோ நாம் கண்டு வருபவை உண்மையில் உக்கிரமான படிமங்களாக இருக்கக்கூடும்.....அந்தப் படிமம் அவனையும் மீறிய ஒன்று. சிற்பி செதுக்கியதுதான் தெய்வச் சிலை.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4005 partheeban Available - Reserve it

குறுந்தொகை - 401 காதல் கவிதைகள்

தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை மொத்தம் ஏழு வகைகள் சொல்லப்படுகின்றன. இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகைக் காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்களில் அதிகம் பார்க்கிறோம். இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் குறுந்தொகைப் பாடல்களில் உள்ளன.ஒவ்வொரு பாடலையும் ஆஸ்பத்திரி சுத்தத்துடன் அணுகாமல் கண்ணீரும் வியர்வையும் பிரிவும் பரிவும் துரோகமும் நட்பும் காதலும் கொண்ட நவ கவிதைகளாகப் பார்க்க வைப்பதே இந்த நூலின் குறிக்கோள். இப்படிப் பார்க்கும்போது இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் குறுந்தொகையிலிருந்து பிறந்தவை என்பது புரியும்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4004 partheeban Available - Reserve it

புறநானூறு - ஒர் எளிய அறிமுகம்

தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீனத் தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார். முதல் தொகுதியாக வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற இந்நூல் இப்போது நானூறு பாடல்களுக்குமான விளக்கத்துடன் முழுத் தொகுதியாக வெளிவருகிறது. சுருக்கமும் தெளிவும் கவித்துவமும் கொண்ட சுஜாதாவின் விளக்க உரை கால இடைவெளியைத் தாண்டி இந்நூலுடன் வாசகனை உறவாடச் செய்கிறது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4003 partheeban Available - Reserve it

முத்தொள்ளாயிரம் - எளிய வடிவில்

என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு, முத்தொள்ளாயிரம். பாடலாசிரியர் அல்லது ஆசிரியர்களின் பெயர் கிடைக்கவில்லை. ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல் என்னும் வீதத்தில் மொத்தம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR NC061 Sathiya Available - Reserve it