You are here

நாவல்

மாயமாய் சிலர்

இந்த நாவல் தினமலர் வாரமலரில் தொடர்கதையாக வந்தது.ஒரு ஜனரஞ்சகமான இதழில் தொடர்கதை எழுதும் போது அதில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் வந்துவிடக்கூடாது. கூடவே அதில் இலக்கியத் தரத்தையோ அல்லது வேறுவிதமான உன்னதங்களையோ கலந்து ஒரு நாவலை உருவாக்குவது என்பது எழுதும் எழுத்தாளர்களின் தனித்தன்மையையும் திண்மையையும் பொறுத்த விஷயமாகும். ந்த மாயமாய் சிலர் நாவலும் ஒரு ஆன்மீக மர்ம்ப்படைப்பே இதை நான் வேகமாய் முடித்து விட்டதாக பலர் கூறினார்கள். நான் அப்படி நினைக்கவில்லை.இதுதான் இந்த நாவலுக்கான சரியான நீளம்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
5013 Paranth Available - Reserve it

தண்ணீர் தேசம்

எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அந்தச் சமுத்திர முயற்சியின் ஒரு துளிதான் இந்தத் ''தண்ணீர் தேசம்''> கடலியலை இலக்கியப்படுத்தும் ஒரு பிள்ளை முயற்சி.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
5002 Paranth Available - Reserve it

கள்ளிக்காட்டு இதிகாசம்

கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக் நீரொழுக் நினைத்துக் கிடந்தேன். பிறந்த மண்ணுக்கும், வாழ்க்கையும் வட்டார வழக்கும் சொல்லிக் கொடுத்த மக்களுக்கும் நான் காட்டும் நன்றி என்று சொல்லலாம் இந்த நாவலை.(2003 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு இது)
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
1044 Paranth Available - Reserve it

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

சுந்தர ராமாசாமியின் முதலிரு நாவல்களிலிருந்து மொழி நடையிலும் அமைப்பிலும் வேறுபட்ட வகையில், முழுக்கவும் குடும்பம் சார்ந்து சூழலைக் களமாகக் கொண்டது. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் கேரளத்தின் கோட்டயத்தில் 1937,38,39 ஆம் ஆண்டுகளில், ஐந்து குடும்பங்களைச் சார்ந்து மனிதர்களிடையேயான உறவு நிலைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் கட்டமைக்கப்பட்டு்ள்ளத. அரசியல், சமூகம் சார்ந்த புறவுலகின் நிகழ்வுகள் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படுத்தும் மறைமுகைத் தாக்கங்களையம் வெளியுலகுக்குத் தெரியாமல் அவர்களுக்குள் புதைந்து கிடக்குமு் ஏக்க்கள், விம்மல்கள்,குமுறல்களையும் கலைநயத்துடன் உணர்த்தும் நாவல் இது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
1043 Paranth Available - Reserve it

கருவாச்சி காவியம்

கருவாச்சி என்கிற கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையின் சில வருட நிகழ்வுகள்தான் இந்தக் கதை. இந்தக் கருவாச்சி யாரோ ஒரு தனிப்பட்ட பெண் அல்லள். எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கிற பெண்குலத்தின் பிரதிநிதி இவள். வாழ்க்கையின் நீரோட்டத்தில் எங்கெங்கோ அடித்துச் செல்லப்பட்டு கடைசியில் சமுத்திரம் சேரும் ஒரு சாதாரண பெண்ணின் கதை.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
MU0002 mugunth Available - Reserve it

ஆ...!

‘ஆ..!’ 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான மனைவி, கை நிறைய சம்பாத்தியம் என்கிற அவனது சந்தோஷ வாழ்க்கையில் திடீரென்று அவன் மண்டைக்குள் ஏதோ ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அது அவனுக்குக் கட்டளையிடுகிறது. வசப்படுத்த முயற்சிக்கிறது. தற்கொலைக்குத் தூண்டுகிறது. இதைத் தொடர்ந்து ஸ்பிலிட் பர்சனாலிடி, முற்பிறவி, ஆவி என அலைக்கழிக்கப்பட்டு, கொலை, கைது, கோர்ட் விசாரணை என்கிற சமயத்தில் கதைக்குள் கணேஷ், வஸந்த் நுழைகிறார்கள்.

ஒரு புளிய மரத்தின் கதை

எழுத்தாளர் சுந்தர இராமசாமியில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். பல தலைமுறைகளாக தன்னைச் சுற்றி நிகழும் மாற்றங்களை ஒரு புளியமரம் விவரிக்கும் புனைவு
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR SR051 Sathiya mugunth