You are here

கிழக்கு பதிப்பகம்

இரண்டாம் உலகப் போர்

மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு, பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம். திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல. மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, தெளிவாகத் திட்டமிடப்பட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்-பட்ட மிருகத்தனம்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4026 partheeban Available - Reserve it

சென்னை மறுகண்டுபிடிப்பு

சென்னையின் வரலாற்று ஆய்வாளரான எஸ்.முத்தையா அவர்களின் ஆங்கிலப் பதிப்பான Madras Rediscovered (2004)ன் தமிழ்ப் பதிப்பு. அன்றைய சென்னையின் நகரத்தையும் வாழ்வியலையும் அழகாக விளக்கும் நூல். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் சி.வி.கார்த்திக் நாராயணன்.

முத்தொள்ளாயிரம் - எளிய வடிவில்

என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு, முத்தொள்ளாயிரம். பாடலாசிரியர் அல்லது ஆசிரியர்களின் பெயர் கிடைக்கவில்லை. ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல் என்னும் வீதத்தில் மொத்தம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4021 partheeban Available - Reserve it

பிரபாகரன் - வாழ்வும் மரணமும்

பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் - இப்போது இல்லை. ஆயிரக்கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை‘மாவீரர் மரணம்’ என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று ஈழத் தமிழர் உலகமே கண்ணீர் சிந்தியது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4020 partheeban Available - Reserve it

அயோத்தி - நேற்றுவரை

'1992 டிசம்பர் 6-ம் தேதி, அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் விளைவாக எழுந்த கலவரங்களில் தேசமே அல்லோலகல்லோலப்பட்டது. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடங்கி கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை அயோத்தி விவகாரத்தின் பின்விளைவுகளை இன்றுவரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். பிரச்னையின் வேரை மறந்துவிட்டு விளைவுகளுக்காக மட்டும் கவலைப்படும்படி ஆக்கிவிட்டது காலம். உண்மையில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு ராமர் கோயில் இருந்ததா? கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதா? இதுவரை அங்கே நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் சொல்லும் முடிவுதான் என்ன?
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4017 partheeban Available - Reserve it

சுபாஸ் - மர்மங்களின் பரமபிதா

இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யாருமில்லை.ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அறவழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம்தான் ஒரே தீர்வு என்று, இந்தியாவை விட்டு ரகசியமாக வெளிர்படும் வகையில் வெளிநாட்டில் இருந்த படியே தனி ஆயுதப்படையையும், தனி அரசாங்கத்தையும் அவரால் உருவாக்க முடிந்தது. போஸ், விமான விபத்தில் இறந்து போனார் என்று பரவலாகச் சொல்கிறார்கள். இல்லை, அவர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்கிறார்கள் சிலர்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4016 partheeban Available - Reserve it

பாகிஸ்தான் - அரசியல் வரலாறு

குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்த பாகிஸ்தானின் அரசியல் வரலாறு. முகம்மதலி ஜின்னா தொடங்கி பர்வேஸ் முஷாரஃப் வரை நீளும் பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது. பாகிஸ்தானில் நிலைகொண்டு, காஷ்மீரில் தீவிரவாதம் வளர்க்கும் அனைத்து இயக்கங்கள் குறித்தும் ஆதாரபூர்வமான தகவல்கள், புள்ளிவிவரங்கள், காஷ்மீர் பிரச்னை பற்றிய ஆழமான அலசல் அடங்கிய நூல் இது. காஷ்மீரை விலக்கிவிட்டு பாகிஸ்தானில் அரசியல் செய்யவே முடியாது என்கிற நிலையில், அந்நாட்டின் அரசியல் குறித்த முழுமையான, ஆதாரபூர்வமான பதிவு தமிழில் முதல்முறையாக வெளிவருகிறது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4013 partheeban Available - Reserve it

உடையும் இந்தியா

இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இந்தப் புத்தகத்தில், ஆசிரியர்கள், மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை மட்டுமே பிரதானப்படுத்தி ஆராய்ந்துள்ளனர்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4025 partheeban Available - Reserve it

திராவிட இயக்க வரலாறு பாகம் 2

திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும் பல பிளவுகளுக்குத் தயாரானது. பிறகு, எமர்ஜென்சி புயலில் சிக்கி, மீண்டு எழுவதற்குள் தேர்தல் தோல்வி. அடுத்த பத்தாண்டுகளுக்கு, எம்.ஜி.ஆரின் சவாலை அவர் சந்திக்கவேண்டியிருந்தது. திமுகவின் முடிவுரையை பலர் எழுத ஆரம்பித்துவிட்ட சமயத்தில், கலைஞர், கட்சியை ஒருங்கிணைத்தார்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4024 partheeban Available - Reserve it

திராவிட இயக்க வரலாறு பாகம் 1

பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முதலில் தமிழகத்தில் உருவானது. பெரியார் அதை முன்னெடுத்தார். சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிடர் கழகம் பிரகடனம் செய்த போரில் ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்துகொண்டது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகத் தொடங்கி, தமிழ்ச்சமூகத்தை ஆளும் மாபெரும் அரசியல் சக்தியாக திமுகவை அண்ணா வளர்த்தெடுத்ததன் பின்னணியில்தான் எத்தனைப் போராட்டங்கள்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4023 partheeban Available - Reserve it