You are here

வா.மு.கோமு

வா.மு.கோமு

மண் பூதம்

வா.மு.கோமு தன்னுடைய வித்தியாசமான, துணிச்சலான சிறுகதை மற்றும் கவிதை முயற்சிகளுக்காகப் பெரிதும் கவனம் பெற்று வருபவர். கலாச்சாரரீதியான மனத் தடைகளை, மொழியின் குதூகலமும் அங்கதமும் கொண்ட இவரது மொழி வெகு இயல்பாகத் தாண்டிச் சென்றுவிடுகிறது. எதார்த்த உலகின் அழுத்தமான காட்சிப்படுத்தல்கள் சட்டென அதீதப் புனைவுகளுக்குள் கரைந்து ஒரு புதிய அனுபவத்தை இக்கதைகள் உருவாக்குகின்றன.

கள்ளி

வா.மு. கோமுவின் எழுத்துகள் குதூக்கலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்க்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வும் மதிப்பீடு களும் கனவுகளும் வெகு இயல்பாகத் தோற்றம் கொள்கின்றன. மத்திய தரக் கலாச்சார மதிப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, தமிழ் வாழ்வின் அறியப்படாத எதார்த்தம் ஒன்றினை வா.மு.கோமு சித்தரிக்கிறார். இந்த எதார்த்தம் சில நேரம் அதிர்ச்சி அளிப்பது; சில நேரம் நம் அந்தரங்க முகத்தைத் திறந்து காட்டுவது; ஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
1006 partheeban Available - Reserve it

சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்

பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்தப் புதிய நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் சொல்லக்கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா.மு.கோமு. நம்முடைய ஆசாபாசங்களும் இரகசிய விருப்பங்களும் நம்மை எந்த அளவுக்கு இன்பமூட்டுமோ அந்த அளவுக்கு இந்த நாவலும் இன்பமூட்டுகிறது. எந்த அளவுக்கு அது நம்மை பயப்படவைக்குமோ அதே அளவுக்கு பயப்படவும் வைக்கிறது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
1005 partheeban Available - Reserve it