You are here

அறிமுகக் கட்டுரைகள்

அறிமுகக் கட்டுரைகள்

தெரிதா - அறிமுகம்

ழாக் தெரிதா 17.07.1930 அல்ஜீரியாவில் பிறந்தார். அக்காலப் பிரிவில் அல்ஜீரியாவில் கடுமையான யூத எதிர்ப்பு காணப்பட்டது. அதனால் அங்குள்ள பாடசாலைகளில் 7% மாத்திரமே யூதர்களுக்கு வழங்கப்பட்டது. ஆகையால் தெரிதாவிற்கு 11 வயது ஆகும் வரை பாடசாலைக்குச் செல்லக் கிடைக்கவில்லை. 11ஆவது வயதில் பாடசாலையில் இணைந்தபோதும் 7% பூர்த்தியாகக் காணப்பட்டதால் உடனடியாக விலக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து வேறொரு பாடசாலையில் இணைந்து கற்றார். தனது 19ஆவது வயதில் பிரான்ஸிலுள்ள எகோல் நாமேல் சுப்பீரியர் கல்லூரியில் இணைந்து கொண்டார். 1956ம் ஆண்டு அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரிலுள்ள ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4018 partheeban Available - Reserve it

ஃபூக்கோ - அறிமுகம்

மனிதனின் மரணத்தை அறிவித்தவர் ஃபிரெஞ்சு பின் நவீனத்துவவாதியான மிஷல் ஃபூக்கோ. அதன் இயல்பான அர்த்தத்தில் மனிதன் என்று அழைப்பதற்கு ஏற்ப யாரும் இல்லை. இருப்பவை யாவும் உடல்களே. அதிகாரத்தின் உரையாடல்கள் மூலம் சாதுவாக்கப்பட்ட உடல்கள். மன்னராட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட் அரசாக இருந்தாலும் சரி, அந்த அரசின் ஆட்சியின் கீழ் வாழும் மனிதன் என்பவன், உடல் என்ற சிறையில் அடைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவாக இருக்கிறான் என்கிறார் ஃபூக்கோ.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4011 partheeban Available - Reserve it

வரம்பு மீறிய பிரதிகள்

சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின்றன. அதே சமயம் எழுத்தின் வரம்புகளை உடைத்தெறிந்த ழார் பத்தாய், கேத்தி ஆர்க்கர், ஹோஸே மரியா ஆர்கெதா, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, க்ரிஸ்டினா பெரி ரோஸி, அல் முகமது ஷுக்ரி போன்றோரின் படைப்புகள் குறித்து மிக ஆழமான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR CN052 Sathiya Available - Reserve it

கலகம் காதல் இசை

உலக இசைப் பரப்பின் சில மகத்தான வடிவங்களையும் கலைஞர்களையும் பற்றி விவாதிக்கும் இந்நூல் மலையாளத்தில் மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவந்து பெரும் கவனத்தைப் பெற்றது. இவை இசையின் பரவசத்தையோ கலைஞர்களின் மகோன்னதத்தையோ பாடும் நூல் அல்ல. மாறாக அந்தந்தச் சமூக, பண்பாட்டு, அரசியல் வெளிகளில் இந்தக் கலைஞர்கள் ஏற்படுத்திய குறுக்கீட்டினையும் அதன் ஊடாக அந்தச் சமூகங்களின் உளவியல் மற்றும் அரசியல் பண்பாட்டினையும் முன்வைக்கிறது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR CN051 Sathiya Available - Reserve it