You are here

உயிர்மை பதிப்பகம்

அதிகாரம், அமைதி, சுதந்திரம்

சாரு நிவேதிதா சமகால சமூக அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. அரசியல் அறவுணர்வும் தார்மீக நியதிகளும் தொடர்ந்து சீரழிக்கப்படும் ஒரு காலகட்டத்தில் இந்த நூல் நமது சமூக விழிப்புணர்விலிருந்து தீவிர எதிர்கொள்ளலை வேண்டி நிற்கின்றன.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4009 partheeban Available - Reserve it

கடவுளும் நானும்

ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விலையும் அவர் அறுதியாக ஆன்மீகம் என்பதை தன்னை வெளி நடத்தும் வெளிச்சமாகக் காண்கிறார்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4008 partheeban Available - Reserve it

தப்புத்தாளங்கள்

உலக நாடுகளில் பரவலாக லத்தீன் அமெரிக்க இலக்கியமே பெரிதும் அறியப்பட்டதாக இருந்து வருகிறது. ஆனால் அதைவிடவும் காத்திரமான இலக்கியம் அரபி மொழியிலிருந்துதான் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன் மகத்தான படைப்புகளையும் படைப்பாளிகளையும் பற்றிய அறிமுகங்களை இந்நூலின் பல கட்டுரைகள் முன்வைக்கின்றன. இஸ்லாமியக் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய ஆன்மீகம் இவற்றின் விழுமியங்களை நாம் அறிந்துகொள்ளத் தடையாக இருப்பது எது என்பது பற்றிய விவாதத்தை இந்த நூல் ஆரம்பித்து வைத்தால் அதுவே இக்கட்டுரைகள் எழுதப்பட்டதற்கான நியாயத்தை நிறைவு செய்யும்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4007 partheeban Available - Reserve it

குறுந்தொகை - 401 காதல் கவிதைகள்

தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை மொத்தம் ஏழு வகைகள் சொல்லப்படுகின்றன. இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகைக் காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்களில் அதிகம் பார்க்கிறோம். இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் குறுந்தொகைப் பாடல்களில் உள்ளன.ஒவ்வொரு பாடலையும் ஆஸ்பத்திரி சுத்தத்துடன் அணுகாமல் கண்ணீரும் வியர்வையும் பிரிவும் பரிவும் துரோகமும் நட்பும் காதலும் கொண்ட நவ கவிதைகளாகப் பார்க்க வைப்பதே இந்த நூலின் குறிக்கோள். இப்படிப் பார்க்கும்போது இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் குறுந்தொகையிலிருந்து பிறந்தவை என்பது புரியும்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4004 partheeban Available - Reserve it

புறநானூறு - ஒர் எளிய அறிமுகம்

தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீனத் தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார். முதல் தொகுதியாக வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற இந்நூல் இப்போது நானூறு பாடல்களுக்குமான விளக்கத்துடன் முழுத் தொகுதியாக வெளிவருகிறது. சுருக்கமும் தெளிவும் கவித்துவமும் கொண்ட சுஜாதாவின் விளக்க உரை கால இடைவெளியைத் தாண்டி இந்நூலுடன் வாசகனை உறவாடச் செய்கிறது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4003 partheeban Available - Reserve it

கணையாழி - கடைசிப்பக்கங்கள்

சுஜாதா கணையாழியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல், வேடிக்கைகள் என விரியும் இப்பத்திகள், வெளிவந்த காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டவை; விவாதிக்கப்பட்டவை. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.என்ற பெயரிலும் சுஜாதா என்ற பெயரிலும் 'நீர்க்குமிழிகள்', 'பெட்டி', 'கடைசிப்பக்கங்கள்' எனப் பல தலைப்புகளில் இவை எழுதப்பட்டன. சுஜாதா என்ற ஆளுமையின் பல்வேறு தோற்றங்களையும் அந்தந்தக் காலகட்டத்தின் பதிவுகளையும் கொண்ட இந்நூல் ஓர் அரியஆவணமாகத் திகழ்கிறது.

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்

நிலவிடம் காதல் கொண்ட மோசமான ஒரு கவிஞன். அவனிடம் செல்வம் ஏதுமில்லை பயத்தைத் தவிர; அது போதுமானதாகவிருந்தது. ஏனெனில் ஞானியாக அவன் இல்லாததால் வாழ்க்கை ஒரு சூதாட்டம் அல்லது ஒதுங்கியிருப்பது என்றும் ஆசை எதுவும் பெரும் பைத்தியக்காரத்தனம் என்றும் மிக அருவருப்பான விவகாரத்திற்கும் ஓர் அழகு உண்டு என்றும் அவன் அறிந்திருந்தான். . . (ரினால்டோ அரெனாஸ்)
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3004 partheeban Available - Reserve it

காத்திருந்த வேளையில்

கவிஞராக அறியப்படும் மனுஷ்யபுத்திரனை ஒரு கட்டுரையாளராக வேறொரு பரிமாணத்தில் வெளிப்படுத்தும் தொகுப்பு. அம்பலம் இணைய இதழில் பத்திகளாக வெளிவந்த இக்கட்டுரைகள் சமூக, இலக்கிய நிகழ்வுகள் பற்றிக் கூர்மையும் அங்கதமும் கொண்ட பார்வைகளை முன்வைக்கின்றன.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3003 partheeban Available - Reserve it

ஜெயமோகன் சிறுகதைகள்

மனித வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கிய அந்தரங்கமான உணர்ச்சிபூர்வமான தேடலை உள்ளடக்கிய கதைகள் இவை. அத்தேடலை அன்றாட வாழ்க்கையிலிருந்து தத்துவத்திலும், வரலற்றிலும், அறிவியலிலும் விரித்துக் கொள்பவை. ஆகவே பலவகையான கதைக்கருக்களும் கதைக்களங்களும் கூறுமுறைகளும் கொண்ட வண்ணமயமான கதையுலகமாக உள்ள தொகுப்பு இது. எல்லாக் கதைகளும் அடிப்படையில் கதை என்ற வடிவைத் தக்கவைத்தபடி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்ட நவீன ஆக்கங்கள். இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத பல கதைகளை உள்ளடக்கிய முழுமையான தொகுப்பு இது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
2023 partheeban Available - Reserve it

இரண்டு சூரியன்

தேவதச்சனின் கவிதைகள் தமிழ்வாழ்வியலின் நுட்பமான பதிவுகளைக் கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமான கவித்துவப் படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன. தத்துவ சார்பு கொண்டது போன்ற தோற்றம் கொண்டிருந்த போதும் இக்கவிதைகள் வாழ்வைக் கொண்டாடுகின்றன. தினசரி வாழ்வின்மீது இத்தனை ருசி கொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்களையும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன. கவிதையின் வழியாக அவர் தமிழ்வாழ்வின் நினைவுகளை மீள்பரிசீலனை செய்கிறார்.