You are here

சுஜாதா

குறுந்தொகை - 401 காதல் கவிதைகள்

தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை மொத்தம் ஏழு வகைகள் சொல்லப்படுகின்றன. இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகைக் காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்களில் அதிகம் பார்க்கிறோம். இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் குறுந்தொகைப் பாடல்களில் உள்ளன.ஒவ்வொரு பாடலையும் ஆஸ்பத்திரி சுத்தத்துடன் அணுகாமல் கண்ணீரும் வியர்வையும் பிரிவும் பரிவும் துரோகமும் நட்பும் காதலும் கொண்ட நவ கவிதைகளாகப் பார்க்க வைப்பதே இந்த நூலின் குறிக்கோள். இப்படிப் பார்க்கும்போது இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் குறுந்தொகையிலிருந்து பிறந்தவை என்பது புரியும்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4004 partheeban Available - Reserve it

புறநானூறு - ஒர் எளிய அறிமுகம்

தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீனத் தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார். முதல் தொகுதியாக வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற இந்நூல் இப்போது நானூறு பாடல்களுக்குமான விளக்கத்துடன் முழுத் தொகுதியாக வெளிவருகிறது. சுருக்கமும் தெளிவும் கவித்துவமும் கொண்ட சுஜாதாவின் விளக்க உரை கால இடைவெளியைத் தாண்டி இந்நூலுடன் வாசகனை உறவாடச் செய்கிறது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4003 partheeban Available - Reserve it

கணையாழி - கடைசிப்பக்கங்கள்

சுஜாதா கணையாழியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல், வேடிக்கைகள் என விரியும் இப்பத்திகள், வெளிவந்த காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டவை; விவாதிக்கப்பட்டவை. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.என்ற பெயரிலும் சுஜாதா என்ற பெயரிலும் 'நீர்க்குமிழிகள்', 'பெட்டி', 'கடைசிப்பக்கங்கள்' எனப் பல தலைப்புகளில் இவை எழுதப்பட்டன. சுஜாதா என்ற ஆளுமையின் பல்வேறு தோற்றங்களையும் அந்தந்தக் காலகட்டத்தின் பதிவுகளையும் கொண்ட இந்நூல் ஓர் அரியஆவணமாகத் திகழ்கிறது.

ஆ...!

‘ஆ..!’ 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான மனைவி, கை நிறைய சம்பாத்தியம் என்கிற அவனது சந்தோஷ வாழ்க்கையில் திடீரென்று அவன் மண்டைக்குள் ஏதோ ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அது அவனுக்குக் கட்டளையிடுகிறது. வசப்படுத்த முயற்சிக்கிறது. தற்கொலைக்குத் தூண்டுகிறது. இதைத் தொடர்ந்து ஸ்பிலிட் பர்சனாலிடி, முற்பிறவி, ஆவி என அலைக்கழிக்கப்பட்டு, கொலை, கைது, கோர்ட் விசாரணை என்கிற சமயத்தில் கதைக்குள் கணேஷ், வஸந்த் நுழைகிறார்கள்.

தேர்ந்த்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் பகுதி

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. இதற்கு முன்பு வெளிவந்த இரண்டு தொகுதிகளும் வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றதுடன் சுஜாதாவின் இலக்கிய ஸ்தானத்தை அவை திட்டவட்டமாக உறுதி செய்தன. இத்தொகுதியில் அவர் மத்தியமர் கதைகள் வரிசையில் எழுதிய கதைகளுடன் வேறு சில கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சமகால மத்தியதர வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் இக்கதைகளில் சில அவை வெளிவந்த காலத்தில் சர்ச்சைகளை உருவாக்கின.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
2005 partheeban Available - Reserve it

தேர்ந்த்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் பகுதி

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத நடத்தைகளும் உருவாக்கும் அர்த்தமின்மையும் அங்கதமும் இக்கதைகளைத் தனித்துவமுள்ளதாக்குகின்றன. மனித மனதின் இருள்வெளிகள், தனிமைகள், அவமானங்கள், சிறுமைகள், வினோதங்கள், சமூகச் சீரழிவுகள் எனப் பல்வேறு தளங்களில் இக்கதைகள் சஞ்சரிக்கின்றன.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
2004 partheeban Available - Reserve it

தேர்ந்த்தெடுத்த சிறுகதைகள் முதல் பகுதி

சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கின்றன. வெளிவந்த காலத்தில் வாசகர்களிடம் ஆழ்ந்த சலனங்களை உருவாக்கிய 'நகரம்', 'பார்வை', 'ரேணுகா', 'எல்டொராடோ', 'கால்கள்', 'தீவுகள் கரையேறுகின்றன' உள்ளிட்ட பல முக்கியக் கதைகள் அடங்கியது இத்தொகுப்பு. வாழ்வின் சில ஆதார குணங்களையும் அபத்தங்களையும் மிக நெருக்கமாகத் தொட்டுச் செல்லும் இக்கதைகள் காலமாற்றத்தால் புதுமை குன்றாதவை.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
2003 partheeban Available - Reserve it

விஞ்ஞானச் சிறுகதைகள்

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுஜாதா எழுதி வந்திருக்கும் விஞ்ஞானச் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு முதன் முதலாக வெளிவருகிறது. தமிழில் விஞ்ஞானக் கதைகளின் முன்னோடியான சுஜாதாவின் இப்படைப்புகளில் நிகழ்காலமும் எதிர்காலமும் அறிவியலும் புனைவும் யதார்த்தமும் கனவும் கலந்து மயங்குகின்றன. கால மாற்றத்தால் புதுமை குன்றாத இக்கதைகள் வாசகர்களின் மனதில் தீராத வினோதங்களைப் படைக்கின்றன.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
2002 partheeban Available - Reserve it

ஸ்ரீரங்கத்து கதைகள்

ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்கள், ஒரு காலம் கடந்துபோனதன் இழப்புகள், மாறுதல்களை எதிர்கொள்ள இயலாதவர்களின் சீரழிவுகள் என்பன இக்கதைகளின் பின்புலமாக இருக்கின்றன. இரண்டு உலகங்களுக்கிடையே அலைக்கழியும் ஒரு வாழ்க்கை முறையினை விவரிக்கும் ஸ்ரீரங்கத்துக் கதைகள் சுஜாதாவின் துல்லியமான சித்தரிப்பு முறையினால் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் உயிர்பெற்று எழச் செய்கின்றன
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
2001 partheeban Available - Reserve it