You are here

கவிதைகள்

தமிழுக்கு நிறம் உண்டு

நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே எட்டிவிட்ட இனம் தமிழர் இனம். மாசுபடாத காற்று - மாசுபடாத தண்ணீர் -மாசுபடாத காடு மாசுபடாத பண்பாடு - இவற்றோடு தமிழினம் செழித்திருந்த சங்க காலத்தில் அதன் மக்கள் தொகை நாற்பது லட்சம் முதல் நாற்பத்தைந்து லட்சம் மட்டுமே. அப்போதே தமிழ் உள்ளூர் மனிதர் குறித்தும் சிந்தித்தது.உலக மானுடம் குறித்தும் உரக்கச் சிந்தித்தது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3014 partheeban Available - Reserve it

நீர்வெளி

Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3013 partheeban Available - Reserve it

நகுலன் கவிதைகள்

கற்பனையில் உருவாக்கிய பிரளயத்தில் நனைந்ததாக நினைத்து, எழுந்து துண்டெடுத்து தலைதுவட்டிக்கொள்வது கவிதையின் இன்னொரு உச்சம். கற்பனையும் எதார்த்தமும் முயங்கும் புள்ளி. சாக்கிய நாயனார் கற்பனையாக மனத்தில் கட்டிய கோயிலின் குடமுழுக்குக்கு ஈசனே நேராக வந்து கலந்துகொண்ட பெரிய புராணக் காட்சியைச் சற்றே நினைத்துக்கொள்ளலாம். கற்பனையின் ஒரு பகுதியை எதார்த்தம் தன் இன்னொரு பகுதியால் முழுமை செய்து பார்த்து மகிழ்கிற கணம் அது. அத்தகைய ஒரு மாபெரும் கணத்தைக் கவிதையில் செதுக்கி நிறுத்துகிறது நகுலனின் கவித்துவம். தமிழ் நவீனக்கவிதை யுகத்தின் தொடக்கக்காலக் கவிஞர்களில் முக்கியமானவர் நகுலன்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3010 partheeban Available - Reserve it

நிலா பார்த்தல்

அதிகபட்ச உண்மையோடும் அதிகபட்ச நேர்மையோடும் வாழவே, அனுமதிக்கப்பட்டிருக்கின்ற என் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நான் முயல்கிறேன். நான் யாரையும் சந்தேகிப்பதில்லை யாரையும் வெறுப்பதுவுமில்லை. உதாசீனங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட நான் நெருங்கி நெருங்கி ஒவ்வொருவரையும் புரிந்துகொள்ளவே முயல்கிறேன். இப்படியான நெருக்கங்கள் மத்தியில் நான் யாரைப் புரிந்துகொள்ள நெருங்குகிறேனோ, அவர்கள் என்னைப் புரிந்துகொள்வதும் பெரும்பாலும் நேர்ந்திருக்கிறது. பகுப்பையும் தொகுப்பையும் அறியாத பரசுரமாகவே நாளிருக்கிறேன்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3009 partheeban Available - Reserve it

விழியீர்ப்பு விசை

கவிஞர் தபூ சங்கர் தனது கவிதை நூல்கள் மூலம் காதலர்களையும் ,காதலையும் வளர்த்து வருபவர் .விழியீர்ப்பு விசை காதல் கவிதை நூல் இது . கவிஞர் தபூ சங்கர் காதல் கவிதைகள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்தவர் .காதலர்களுக்குப் பிடித்த கவிஞர் தபூ சங்கர். இவரது நூலைத்தான் காதலர்கள் பலர் பரிசு நூலாகப் பரிமாறிக் கொள்கிறார்கள் . காதலர்கள் காதலைப் போலவே காதல் கவிதைகளையும் நேசிக்கின்றனர் .அதனால்தான் பல பதிப்புகளில் நூல் வந்துக் கொண்டே இருக்கின்றது. கவிஞர்கள் அறிவுமதி ,பழனி பாரதி இருவரின் அணிந்துரையும் நூலிற்கு உரம் சேர்க்கும் விதமாக உள்ளது .
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3006 partheeban Available - Reserve it

முகவீதி

வசீகரமான சொற்கலவை பயின்றுவரும் கவிதைகளோடு எண்பதுகளில் தீவிரமாக இயங்கிய கவிஞர், ராஜ சுந்தரராஜன். முகவீதி இவருடைய முக்கியமான கவிதைத்தொகுதி.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3005 partheeban Available - Reserve it

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்

நிலவிடம் காதல் கொண்ட மோசமான ஒரு கவிஞன். அவனிடம் செல்வம் ஏதுமில்லை பயத்தைத் தவிர; அது போதுமானதாகவிருந்தது. ஏனெனில் ஞானியாக அவன் இல்லாததால் வாழ்க்கை ஒரு சூதாட்டம் அல்லது ஒதுங்கியிருப்பது என்றும் ஆசை எதுவும் பெரும் பைத்தியக்காரத்தனம் என்றும் மிக அருவருப்பான விவகாரத்திற்கும் ஓர் அழகு உண்டு என்றும் அவன் அறிந்திருந்தான். . . (ரினால்டோ அரெனாஸ்)
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3004 partheeban Available - Reserve it