You are here

நகுலன் கவிதைகள்

கற்பனையில் உருவாக்கிய பிரளயத்தில் நனைந்ததாக நினைத்து, எழுந்து துண்டெடுத்து தலைதுவட்டிக்கொள்வது கவிதையின் இன்னொரு உச்சம். கற்பனையும் எதார்த்தமும் முயங்கும் புள்ளி. சாக்கிய நாயனார் கற்பனையாக மனத்தில் கட்டிய கோயிலின் குடமுழுக்குக்கு ஈசனே நேராக வந்து கலந்துகொண்ட பெரிய புராணக் காட்சியைச் சற்றே நினைத்துக்கொள்ளலாம். கற்பனையின் ஒரு பகுதியை எதார்த்தம் தன் இன்னொரு பகுதியால் முழுமை செய்து பார்த்து மகிழ்கிற கணம் அது. அத்தகைய ஒரு மாபெரும் கணத்தைக் கவிதையில் செதுக்கி நிறுத்துகிறது நகுலனின் கவித்துவம். தமிழ் நவீனக்கவிதை யுகத்தின் தொடக்கக்காலக் கவிஞர்களில் முக்கியமானவர் நகுலன். தொடக்கக்காலத்தில் வெளிவந்த இவருடைய கோட் ஸ்டான்ட் கவிதைகள் என்னும் கவிதைத்தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்ற ஒன்று. சிறுகதை, நாவல், கட்டுரை என எல்லாத் தளங்களிலும் இயங்கிய படைப்பாளி.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3010 partheeban Available - Reserve it